» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடி ஆட்சியில் சீனர்களும், அம்பானியும் பணம் சம்பாதிக்கிறார்கள்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

திங்கள் 12, பிப்ரவரி 2024 8:12:15 AM (IST)

மோடி ஆட்சியில் சீனர்களும், அம்பானியும் பணம் சம்பாதிக்கிறார்கள்; அனைத்து ராணுவ தளவாட ஒப்பந்தங்களும் அதானிக்கே அளிக்கப்படுகின்றன என்று ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த மாதம் 14-ந் தேதி மணிப்பூரில் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை தொடங்கினார். நாகலாந்து, மேகாலயா, அசாம், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை கடந்து வந்த யாத்திரை, ஒடிசா வழியாக கடந்த 8-ந் தேதி சத்தீஷ்கார் மாநிலத்துக்குள் நுழைந்தது.

ராய்கார் மாவட்டம் ரெங்கர்பாலி சோதனை சாவடி வழியாக மாநிலத்துக்குள் நுழைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்திலும் ராகுல்காந்தி கலந்து கொண்டார். பிறகு யாத்திரைக்கு 2 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ராய்காரில் இருந்து மீண்டும் யாத்திரை தொடங்கியது. ராய்காரில் காந்தி சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவித்தார்.

அவர் திறந்த ஜீப்பில் யாத்திரை புறப்பட்டார். அவருடன் மாநில காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் ஆகியோரும் சென்றனர். ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர். கார்சியா சட்டசபை தொகுதி நோக்கி யாத்திரை சென்றது. வழியில், கேவ்தாபாடி சதுக்கத்தில் ராகுல்காந்தி பேசினார்.

அவர் பேசியதாவது: நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் வன்முறையும், வெறுப்புணர்வும் பரப்பப்படுகின்றன. மொழி, மாநிலம் அடிப்படையில் ஒருவரையொருவர் வெறுக்கின்றனர். இந்த சிந்தனை, நாட்டை பலவீனப்படுத்தி விடும். நாட்டின் மரபணுவிலேயே அன்பு இருக்கிறது. வெவ்வேறு மத நம்பிக்கைகளும், சிந்தனைகளும் கொண்ட மக்கள் அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும், பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் வெறுப்பை பரப்புகின்றன.

(ஒரு செல்போனை காட்டி)இந்த போன், சீனாவில் தயாரிக்கப்பட்டது. இதை இந்தியாவில் அம்பானி போன்றவர்கள் விற்கிறார்கள். இந்த போனை பயன்படுத்தி, சீனர்களும், அம்பானியும் பணம் சம்பாதிக்கிறார்கள். இதை சத்தீஷ்காரிலேயே தயாரிக்க நான் விரும்புகிறேன். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்காததால், மக்களுடன் நேரடியாக பேச யாத்திரையை தொடங்கிேனன்.

அனைத்து ராணுவ தளவாட ஒப்பந்தங்களும் அதானிக்கே அளிக்கப்படுகின்றன. இதை நான் நாடாளுமன்றத்தில் பேசியபோது, எனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. எனது அரசு பங்களாவையும் காலி செய்ய சொன்னார்கள். நான் மக்களின் மனங்களில் வாழ்வதால், அவர்களின் வீடு தேவையில்லை.

மணிப்பூரில் கலவரம் நடந்து நூற்றுக்கணக்கானோர் பலியாகி விட்டனர். இருப்பினும், பிரதமர் மோடி இன்னும் அங்கு செல்லவில்லை. அங்கு உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. மணிப்பூர், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை இவ்வாறு அவர் பேசினார்.

சத்தீஷ்காரில் 536 கி.மீ. தூரம் யாத்திரை நடக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில், இந்த யாத்திரை தொண்டர்களின் மன உறுதியை அதிகரிக்கும் என்று காங்கிரசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

ஆமா நாம எல்லாம் முட்டாளா?Feb 12, 2024 - 08:38:11 PM | Posted IP 162.1*****

திருட்டு திராவிட குடும்பங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்தது பப்பு கண்ணுக்கு தெரியவில்லை. அடிக்கடி ஊர் ஊற்றாக சுற்றும் வெட்டி பய பப்புக்கு கோடிக்கணக்கில் காசு எங்கிருந்து வருகிறது நாம எல்லாம் முட்டாளா?

VETRIFeb 12, 2024 - 04:34:32 PM | Posted IP 172.7*****

பப்பு புலம்பி கொண்டே இருக்காமல் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் கோமாளி ஆமையுடன் கூட்டணி வைத்தால் காணாமல் போய் விடலாம், மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory