தூத்துக்குடி மாவட்டம் மாவடி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி என்பவரது மகன் தங்கபாண்டியன் (45). இவர் தனது ராயல் என்ஃபீல்ட் பைக்கில் திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த தங்கபாண்டியனை மீட்டு, சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக லாரியை ஓட்டி வந்த புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் கோபிநாத் (29) என்பவர் மீது நாலாட்டின்புத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.