தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, 6,574 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்-4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி:
கிராம நிர்வாக அலுவலர் (VAO) - 291
இளநிலை உதவியாளர் - 3,798
தட்டச்சர் - 1,572
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
வரி வசூலிப்பவர் - 107
வரி தண்டலர் - 97
நேர்முக எழுத்தர் - 60
வனக்காவலர் & முதுநிலை ஆய்வக உதவியாளர் - 40
மேலும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், பதிவறை எழுத்தர், விற்பனை உதவியாளர் உள்ளிட்ட 46 வகையான பதவிகளில் மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 5-ம் தேதி (05.11.2026)
விண்ணப்பத் திருத்தக் காலம் (Correction Window): நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை
தேர்வு நடைபெறும் நாள்: 2027 ஜனவரி 10-ம் தேதி (காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை)
தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் www.tnpscexams.in அல்லது www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வு கொள்குறி முறையில் (OMR-based) நடைபெறும். தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வில் 100 வினாக்கள் (150 மதிப்பெண்கள்), பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுப் பிரிவில் 100 வினாக்கள் (150 மதிப்பெண்கள்) என மொத்தம் 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும்.
இம்முறை குறைந்தபட்சம் 15 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

