தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் தூத்துக்குடி மாநகர் முழுவதும் உள்ள கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதிவரும் சூழலில், கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் மாநகர் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

தீபாவளித் பண்டிகை வியாபாரம் உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், திடீரென ஏற்பட்ட மின் துண்டிப்பால் ஜவுளி, பட்டாசு மற்றும் இதர சிறு-குறு வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மின்சாரம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து மின் வாரியத்தின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அவதி நீடித்து வருகிறது.