தூத்துக்குடியில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 119 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மூன்றாவது மைல் பாலம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அணி நிா்வாகிகள் கவிதாதேவி, பிரபு, அருண்குமாா், குபோ் இளம்பாிதி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், சுரேஷ்குமார், ரவீந்திரன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், கண்ணன், இசக்கிராஜா, சந்திரபோஸ், ரங்கசாமி பொன்னப்பன், விஜயகுமாா், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், ஏசுவடியான், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தேவர் மகா சபை சார்பில் அதன் தலைவர் பெருமாள் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சுடலை மணி, பொருளாளர் அருள்ராஜ், நிர்வாகிகள் முருகன், கணேசன், பேச்சிமுத்து, மாரிமுத்து, சிங்கம் சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி புறநகர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வினோத் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இணை செயலாளர் விக்னேஷ், நிர்வாகிகள் ஜெயராஜ், வெள்ளத்துரை கணேஷ், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

