தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை 08.10.2026 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகர பகுதிகள் முழுவதும் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.