தூத்துக்குடி மாவட்டம், சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கி வந்த TN 69 G 0398 எண் கொண்ட மகேந்திரா 2006 (Model) அரசு வாகனத்தை பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புகிறவர்கள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், வருகின்ற 16.10.2026 அன்று காலை 10.30 மணிமுதல் 11.30 மணிக்குள் நுழைவு கட்டணம் ரூ.50/- மற்றும் முன்வைப்புத் தொகை ரூ. 500/- (ரூபாய் ஐந்நூறு மட்டும்) செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் சரியாக 12 மணியளவில் நடைபெறும்.

அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக ஏலம் கேட்கப்பட்ட ஏலத்தொகையில் 100 சதவீதம் மற்றும் அதற்கான தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும். அதன்பின்னர் ஏலதாரருக்கு விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.