தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேசுவரர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயமாகும். இக்கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சுவாமி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. பின் சுவாமி - அம்பாள் சப்பரத்தில் எழுந்துருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அங்குபனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த 20 அடி உயர சொக்கப்பனைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் செய்யப்பட்டு ஐந்து அகல் விளக்குளில் நெய் தீபம் கொண்டு கொளுத்தப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாள் ரத வீதி உலா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.