தூத்துக்குடி புதுக்கிராமம், பெருமாள் கோவில் எதிரில் உள்ள பிராமின் காலனி பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்கி நிற்பதால் அப்பகுதிமக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி புதுக்கிராமம் பெருமாள் கோவில் எதிரில் உள்ள பிராமின் காலனியில் கடந்த சில நாட்களாகவே அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக, கழிவுநீர் தொடர்ந்து கசிந்து சாலையில் பரவி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

தற்போது மழைக்காலமாக உள்ளதால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து, அப்பகுதி முழுவதும் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதாள சாக்கடையை சீரமைத்து, கழிவுநீர் கசிவை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.