நெல்லை மாவட்டம் பணகுடி சேக்ரட் ஹார்ட் பள்ளித் தலைமையாசிரியர் அருட். சகோதரர் செல்வராஜுக்கு விதைப்பந்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஒரு லட்சம் விதைப்பந்துகளை மாணவ, மாணவிகளைக் கொண்டு செய்து வீசியதற்காக, நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (சிஇஓ) சிவக்குமாரால் அவர் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் கல்வித்துறை ஊழியர் மற்றும் விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் உடனிருந்தார்.