தூத்துக்குடியில், பாளையங்கோட்டை ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான மையவாடி அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 12வார்டிகள் உள்ளன. இந்த மையவாடிக்கு செல்லும் பாதையில் கருவேலம் உள்ளிட்ட முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன.

இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் இறுதி ஊர்வல வாகனம் கூட உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பாதை மோசமாகியுள்ளது. மேலும், மயானத்திற்கு வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முட்செடிகளால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 12 வது வாடியில் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவில் முள்செடிகள் வளர்ந்துள்ளன.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த முட்செடிகளை அகற்றி, இறுதி ஊர்வலம் செல்வதற்கு வசதியாக பாதையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.