திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய போதிலும் தமிழக அரசு அனுமதி வழங்காததைக் கண்டித்து, தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சியினர் இன்று (செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24) கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டிக்கும் வகையில், தூத்துக்குடி சிவன் கோவில் வாசல் முன்பு கூடிய இந்து மக்கள் கட்சியினர் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் மாநில அமைப்புச் செயலாளர் செல்வ சுந்தர், மாவட்ட அமைப்பாளர் சுடலைமணி, மாவட்டத் துணைத் தலைவர் சுந்தர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.