கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள வாட்சபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் (72). இவரது மகன் டேவிட்சன் (42). மதுப் பழக்கத்திற்கு அடிமையான டேவிட்சன், தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது முதிய தந்தை சுவாமிதாஸை அடித்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு (நவம்பர் 22) மதுபோதையில் இருந்த டேவிட்சன், தனது தந்தை சுவாமிதாஸை இரவு முழுவதும் கொடூரமாகவும் தாறுமாறாகவும் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய சுவாமிதாஸ், நள்ளிரவு 12 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்ற மகனே குடிபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த இச்சம்பவம் வாட்சபுரம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்த பூதப்பாண்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுவாமிதாஸின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.