திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (23.11.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகள் நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்க்கரை நாற்காலி 2 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் வழங்கினார்.
தொடர்ந்து, சேரன்மகாதேவி வட்டம் பத்தமடை கிராமத்தைச் சார்ந்த பீர் முகமது பிர்தௌஸ் என்பவர் சவூதி அரேபியா நாட்டில் பணிபுரிந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததற்கு இந்திய தூதரகம் மூலம் சவுதி அரேபியாவிலிருந்து வரப்பெற்ற இழப்பீட்டுத்தொகை ரூ.4,83,453/- க்கான காசோலையை அன்னாரது மனைவி காஜா செய்துன நிஷாவுக்கு பாரத ஸ்டேட் வங்கி காசோலயை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.வித்யா , தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ரோஷன் பேகம் , மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷ் , வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை வட்டாட்சியர் சரவணன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

