திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், 'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தனது 'தமிழக வெற்றிக் கழகம்' மூலம் அரசியலில் பிரவேசித்ததைத் தொடர்ந்து, முன்னணி நட்சத்திரங்களான சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.
இதில் குறிப்பாக, நடிகர் தனுஷ் தனது அகில இந்தியத் தனுஷ் நற்பணி மன்றத்தை மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாகப் பிரித்து நிர்வாகிகளை நியமித்து உறுப்பினர் சேர்க்கைத் தீவிரப்படுத்தி வந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரைத் தனுஷ் தரப்பில் பதிவு செய்துள்ளனர். அக்கட்சிக்கு 'தமிழக எழுச்சிக் கழகம்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
விரைவில் பொதுவெளியில் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தனுஷ் அறிவிப்பார் என்றும், அப்போது கட்சியின் கொடி, கொள்கைகள் மற்றும் முக்கிய கோட்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

