இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தேர்தல் வாக்குத் திருட்டு முறைகேடுகளைக் கண்டித்து, 'ஜனநாயகம் காப்போம்' என்ற பெயரில் வரும் அக்டோபர் 14-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி புதுக்கிராமப் பகுதியில் உள்ள 'ஆல்வின் மீட்டிங் ஹாலில்' வைத்து நடைபெற்ற இக்கூட்டத்திற்குத் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமை தாங்கினார். தேசியத் தலைமை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் கூட்டணி கட்சிகளின் அறிவுறுத்தலின்படி, வரும் அக்டோபர் 14-ம் தேதி காலை 10 மணிக்குத் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள இக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து அவர் ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி சுரேஷ், தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் ரஞ்சன், வடக்கு மாவட்ட மதிமுக அவைத்தலைவர் பேச்சிராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், மேலிடப் பொறுப்பாளர் தமிழினியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர் கே.எஸ். அர்ச்சுனன், மாவட்டச் செயலாளர்கள் கே.பி. ஆறுமுகம், முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, சிவராமன், மாநகரச் செயலாளர் முத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் பாஜுல் அஸ்ஹாப், மதிமுக நகரச் செயலாளர் முருக பூபதி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் சேகர், ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், ஏ.டி.எஸ். அருள், கோபால், மைக்கேல் பிரபாகர், ஜான் பிரிட்டோ, ஜேம்ஸ் லாரன்ஸ், ரஞ்சிதம் ஜெபராஜ், ஏ.டி. பிரபாகரன், டேவிட் வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

