
பதிவு செய்த நாள் | வியாழன் 21, ஏப்ரல் 2016 |
---|---|
நேரம் | 7:56:51 PM (IST) |
உதயநிதி, ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் மனிதன் திரைப்படம் தணிக்கையில் யூ சான்றிதழைப் பெற்றிருக்கிறது. உதயநிதி,ஹன்சிகா, பிரகாஷ் ராஜ்,விவேக், ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மனிதன். ஜாலிஎல்எல்பி என்ற பெயரில் இந்தியில் வெளியாகி இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தமிழுக்குத் தகுந்தாற்போல மாற்றி எடுத்திருக்கின்றனர். என்றென்றும் புன்னகை அஹமத் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.