அப்புகுட்டியை போட்டோ எடுத்த அஜித்குமார்
பதிவு செய்த நாள் | செவ்வாய் 30, ஜூன் 2015 |
---|---|
நேரம் | 8:29:42 PM (IST) |
நடிகர் அஜித், அப்பு குட்டியை வைத்து குறும்படம் இயக்கப்போவதாக ஒரு செய்தி திடீரென பரவியது. ஆனால் அது பொய்யே என அஜித்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தற்போது இந்த செய்தி வந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. அஜித், அப்பு குட்டியை வைத்து விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளார். மேலும் அப்பு குட்டியின் இயற்பெயர் சிவ பாலன் என்பதைத் தெரிந்து கொண்ட அஜித், இனி தானும் அவ்வாறே அழைக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.