பதிவு செய்த நாள் | திங்கள் 8, ஜூன் 2015 |
---|---|
நேரம் | 7:49:38 PM (IST) |
நடிகர் அருள்நிதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகள் கீர்த்தனாவுக்கும், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், நடிகர் அருள்நிதி - கீர்த்தனா திருமண வரவேற்பு சென்னையில் அண்ணா அறிவாலய அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, தமிழக ஆளுநர் ரோசையா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திமுக பெருளாளர் மு.க. ஸ்டாலின், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக எம்பி கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, தாமக தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் சத்தியராஜ், கவிஞர் வைரமுத்து மற்றும் திரைப்பட பிரபலங்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.