பதிவு செய்த நாள் | செவ்வாய் 17, மே 2011 |
---|---|
நேரம் | 7:20:32 PM (IST) |
தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதைக் காண ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் திரண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள தவிர குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் பங்கேற்றனர். சென்னை பல்கலைக்கழக விழா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்று வருகின்றனர். பதவியேற்புக்குப் பின்னர் இன்று மாலை ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவை சகாக்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்து பணிகளைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தே.மு.தி.க., தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த், இடதுசாரி தலைவர்கள் ஏ.பி., பரதன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மற்றும் மனித நேய மக்கள் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி உள்ளிட்ட தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் , பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் சோ, ஐகோர்ட் நீதிபதிகள் , போலீஸ் உயர் அதிகாரிகள், உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர். படங்கள்:நித்தின் கண்ணன்,சென்னை.