தூத்துக்குடி மாவட்டம், மணிநகர் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த பைக் மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் வாலிபர் நூலிழையில் உயிர் தப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்திற்குச் சென்ற வாலிபர்கள் சிலர், மணிநகர் பகுதியில் உள்ள டீக்கடையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவ்வழியாக வேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக அந்த பைக் மீது மோதிவிட்டுச் சென்றது.
இப்போது பைக் மீது அமர்ந்திருந்த வாலிபர் லேசான காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினார். இருப்பினும் பைக் தூக்கி வீசப்பட்டதில், சாலையோரம் நின்றிருந்த பணகுடியைச் சேர்ந்த விக்னேஷ் (19) என்பவர் காயமடைந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்ச்கைக்காகச் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து விபத்தை ஏற்படுத்திய தட்டார்மடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (46) என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

