நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள், கழிப்பறை வசதிகள் மற்றும் அவற்றின் பராமரிப்புப் பணிகளைப் பார்வையிட்டார். பொதுமக்களுக்குச் சுகாதாரமான மற்றும் முறையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், பேருந்து நிலையத்தைத் தூய்மையாகப் பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்றுவதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார். மேலும், பேருந்து நிலையத்தில் தூய்மையைப் பேணுதல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறின்றிச் சேவை வழங்குதல் போன்ற பணிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.

