தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதனின் மகள் பொன்னரசி சண்முகநாதன் மற்றும் அவரது கணவர் அசோக் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழக மத்திய மாவட்டச் செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் முன்னிலையில் பொன்னரசி சண்முகநாதன் மற்றும் அசோக் ஆகியோர் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட அதிமுகவின் முக்கியத் தலைவராகவும், மாவட்டச் செயலாளராகவும் உள்ள முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகளே ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது, தூத்துக்குடி மாவட்ட அதிமுக வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

