தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு தகுந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பதவிக்கு விண்ணப்பதாரர் முழுமையான பார்வையற்றவராக இருத்தல் வேண்டும். கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். நாற்காலி வயர் பின்னுதலில் ஒரு வருடகால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அட்டை, சாதி சான்று (Most Backward classes and Denotified communities) (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பை சார்ந்தவர்கள்) மட்டும்,
UDID அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் 2 ஆகிய சான்றுகளுடன் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 30.11.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

