தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் 09, வார்டு எண் 29-க்குட்பட்ட மீனாட்சிபுரம் தெரு பகுதியில் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள கடை ஒன்றிலிருந்து கலப்புக் குப்பைகள் வழங்கப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்தக் கடை உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குப்பைகளை முறையாகத் தரம் பிரித்து வழங்கும் வரை, குறிப்பிட்ட கடையிலிருந்து கலப்புக் குப்பைகள் எடுக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காதவர்கள் மீது தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.