கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தவும், காவல்துறையின் ரோந்துப் பணிகளை நவீனத் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைத்துத் துரிதப்படுத்தவும், கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை சார்பில் 'குமரிக் காவல் கண்' என்ற புதிய கண்காணிப்புத் திட்டம் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மாவட்ட எஸ். பி. அன்ஷுல் நாகர் இன்று காலை நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் எடிஎஸ்பி கலையரசன், நாகர்கோயில் டவுண் டிஎஸ்பி இளஞ்செழியன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

