தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் கூடிய வீடியோவைப் பதிவிட்டிருந்தது போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட தெற்கு காவல் நிலைய போலீசார், வீடியோ பதிவிட்ட நபர் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரின் மகன் கண்ணன் என்ற காப்ரா கண்ணன் (26) என்பதைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கண்ணன் என்ற காப்ரா கண்ணனைக் கைது செய்த தெற்கு காவல் நிலைய போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

