இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ள 'மிஸ்டர் பாரத்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கட்சி சேர’ பாடல் மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.