தமிழ்நாடு

Browse content

நாளை கடைகளில் யு.பி.ஐ. பரிவர்த்தனை நிறுத்தம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு!

நாளை (அக்டோபர் 2) கடைகளில் டிஜிட்டல் முறையிலான யு.பி.ஐ. மற்றும் கியூ.ஆர். கோட் பணப் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ். சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனாவுக்குத் தலா 30 லட்சம் ஊக்கத்தொகை — முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனாவுக்குத் தலா 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜெருசலேம் புனித பயணம் செல்ல ரூ.60,000 வரை மானியம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

குமரியில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்: வடசேரி புதிய ஆய்வாளராக மாடசாமி நியமனம்!

வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் மோகன அய்யர் களக்காடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, புதிய ஆய்வாளராக மாடசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்ஆர் காப்பி வழங்குவதில் விதிமீறலா? கோப்புகளை முழுமையாக ஆய்வு செய்ய பாஜக வலியுறுத்தல்!

தூத்துக்குடி மாநகராட்சியில் LR காப்பி (Land Record Copy) வழங்கும் நடைமுறையில் குளறுபடிகள் உள்ளதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.

பாளையங்கால்வாய், நயினார்குளம் கால்வாய் தூர்வாரும் பணிகள் — ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் ஆய்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கால்வாய் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதியோருக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: பிரதமருக்கு கோரிக்கை மனு!

ரயிலில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்குக் குறைந்தபட்சம் ஸ்லீப்பர் மற்றும் 3 ஏசி வகுப்புகளிலாவது கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கவின் ஆணவக்கொலை தீர்ப்பைக் கண்டித்து பெற்றோர் காத்திருப்புப் போராட்டம்!

நெல்லை கவின் ஆணவப்படுகொலை வழக்கில் தீர்ப்பை எதிர்த்து அவரது பெற்றோர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காந்தாரியம்மன் கோவில் திருவிழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!

விளாத்திகுளம் அருகே ஸ்ரீ காந்தாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேர்தல் ஆணையர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடியில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் தேர்தல் வழக்கு விசாரணை தொடரும்: இசக்கி சுப்பையா மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தனது வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் சீற்றம்: ராட்சத அலையில் சிக்கி 5பேர் காயம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி 5பேர் காயம் அடைந்தனர்.