கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய ஒருங்கிணைந்த 4 மாவட்டங்களுக்கான 108, 102 மற்றும் 155377 ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யும் பணி முகாம் நாளை (10-ம் தேதி) நாகர்கோவிலில் நடைபெறவுள்ளது.

இவ் வேலைவாய்ப்பு முகாமினை 'EMRI GREEN HEALTH services' நிறுவனம் நடத்தவுள்ளது. நாகர்கோவில் கோட்டாறில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நாளை (10.10.2026) இம் முகாம் நடைபெறுகிறது.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்குப் பகல் மற்றும் இரவுச் சுழற்சி முறையில் 12 மணி நேரப் பணி வழங்கப்படும். வெளியூர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளைத் தாங்களே செய்துகொள்ள வேண்டும், இதற்காகத் தனியாகப் படி எதுவும் வழங்கப்பட மாட்டாது.

கல்வித் தகுதி & வயது வரம்பு விவரங்கள்:

மருத்துவ உதவியாளர்கள் (Medical Technicians):

தகுதி: B.Sc Nursing, GNM, ANM, DMLT முடித்திருக்க வேண்டும். அல்லது B.Sc Zoology, Botany, Bio-Chemistry, Microbiology, Biotechnology ஆகிய Life Science பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ₹21,320 வழங்கப்படும்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் (Drivers):

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது : 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ₹21,120 வழங்கப்படும்.

இத் தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 10 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இம் முகாம் குறித்த மேலும் விவரங்களை அறிய 7397724841, 7397724822 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.