தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல் போன செல்போன்கள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத் உத்தரவின்பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்களைக் கொண்டு தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்திய போலீசார், சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 132 செல்போன்களை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டக் காவல் அலுவலகத்தில் இன்று (23.11.2026) நடைபெற்ற நிகழ்வில், மீட்கப்பட்ட 132 செல்போன்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத் அவற்றின் உரிமையாளர்களிடம் நேரில் ஒப்படைத்தார். தொலைந்து போன தங்களது செல்போன்களை மீண்டும் பெற்றுக்கொண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

