கல்வி உரிமை தொடங்கி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவு, அரசியல் பங்கேற்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி கடற்கரை சாலையிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 18 வயதுக்கு கீழ் ஆண்கள், 18 எதுக்கு மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் பெண்கள் என நான்கு பிரிவுகளில் ஓட்டம் நடைபெற்றது. மாராத்தான் ஓட்டத்தை காமராஜ் கல்லூரி முதல்வர் பானுமதி தலைமையில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், அகரம் பரமகுரு ஆகியோர் தொடங்கி தொடங்கி வைத்தனர்.
கடற்கரை சாலையில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஜார்ஜ் ரோடு திருச்செந்தூர் சாலை துறைமுக சாலை வழியாக ஏழு கிலோமீட்டர் தூரம், 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

