தூத்துக்குடியில் கல்லூரி மாணவி ரத்ன ஸ்ரீ முத்துராஜ் எழுதிய '5 ஸ்டெப்ஸ்' (5 Steps) என்ற ஆங்கில நூலின் மதிப்புரை வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஆங்கிலப் பேராசிரியர் பெட்ரிசியா தலைமை தாங்கிச் சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற ஸ்பிக் ஊழியர் செல்வின் நிகழ்விற்கு முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நூல் மதிப்புரை நிகழ்வில், செயின்ட் ஆன்ஸ் செவிலியர் கல்லூரி மாணவி அகஸ்டா திரோஸா மற்றும் தூய மரியன்னை கல்லூரி ஆங்கிலத் துறை மாணவி ஏஞ்சலின் ஆகியோர் கலந்து கொண்டு '5 ஸ்டெப்ஸ்' புத்தகத்தின் சுவாரஸ்யமான அம்சங்கள் மற்றும் கருத்துக்கள் குறித்துச் விரிவான மதிப்புரையை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, நூலின் ஆசிரியரும் கல்லூரி மாணவியுமான ரத்ன ஸ்ரீ முத்துராஜ் தனது ஏற்புரையில் புத்தகத்தின் உருவாக்கம் மற்றும் நோக்கம் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக, நிகழ்ச்சியை லாரன்ஸ் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். விழாவின் நிறைவாக ஆசிரியர் ராஜ்குமார் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் திரளான வாசகர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டனர்.