தூத்துக்குடி ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய நுழைவு வாயில் மற்றும் நடைமேடை சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கிழக்கு பகுதியில் பிரமாண்ட புதிய நுழைவு வாயில் மற்றும் முகப்பு கட்டிடம், பயணிகள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி பாதை வசதி,3 நடை மேடைகளும் உயர்த்தப்பட்டு, கூரை வசதி, குடிநீர், மின் விளக்கு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சாய்தள பாதை, லிப்ட் வசதி, புதிய பார்க்கிங் வசதி மற்றும் உப்பு நீரை குடிநீராக்கும் நவீன அமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே போன்று மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, கோவில்பட்டி உள்ளிட்ட 13 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மதுரை கோட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளனர். இப்பணிகள் முடிந்தால் தூத்துக்குடி ரயில் நிலையம் விமான நிலையத்திற்கு இணையான வசதிகளுடன் காட்சியளிக்கும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.