தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கம், முத்துநகர் எக்ஸ்பிரஸ் நேர மாற்றம் மற்றும் புதிய வழித்தட நீட்டிப்புகள் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தெற்கு ரயில்வே முதன்மை பயணிகள் போக்குவரத்து மேலாளருக்குத் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலாளர் மா. பிரமநாயகம், தெற்கு ரயில்வே முதன்மை பயணிகள் போக்குவரத்து மேலாளர்சுப்பிரமணியனுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
1) தூத்துக்குடியில் இருந்து காலையில் மதுரை / போடிநாயக்கனூர் / திருச்சி / சென்னை போன்ற நகரங்கள் ஏதாவது ஒரு நகரத்திற்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும்.
2) வண்டி எண். 16765-16766 தூத்துக்குடி - மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி வாரம் இரு முறை இயங்கும். ரயிலை தினசரி ரயிலாக மாற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) வண்டி எண். 06019 / 06020 தூத்துக்குடி- நரசப்பூர் ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும்.
4) வண்டி எண். .12694 தூத்துக்குடி-சென்னை முத்துநகர் அதிவிரைவு ரயிலை காலை 7:00 மணிக்குள் சென்னை எழும்பூர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5) தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்.
6) வண்டி எண். 16791/16792 தூத்துக்குடி-பாலக்காடு, பாலக்காடு-தூத்துக்குடி விரைவு ரயிலீல் II A/C -1, இணைக்கப்பட வேண்டும். மேலும் இந்த ரயிலை காலை 10 மணிக்குள் பாலக்காடு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாலை 6 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும்.
7) வண்டி எண். 22623-22624 மதுரை- சென்னை வாரம் இருமுறை இயங்கும் ரயிலை தூத்துக்குடி வரை நீடித்து, தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.
8) வண்டி எண். 22101/22102 மதுரை- லோக் மானிய திலக் - மதுரை வாராந்திர விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும்.
9)வண்டிஎண்.16236 மைசூர்-தூத்துக்குடிவிரைவு ரயிலை தூத்துக்குடிக்கு காலை 09-30 மணிக்குள் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10) வண்டி எண். 56707-56708 திருநெல்வேலி – கன்னியாகுமரி- திருநெல்வேலி ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும.
11) வண்டி எண்..17615/17616 தூத்துக்குடி கட்ச்குடா, -தூத்துக்குடி விரைவு ரயிலுக்கு தூத்துக்குடி மேலூர் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

