நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரது மனைவியான மதுமிதா (வயது 28), இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகப்படியான நகைகளை அணிந்து கொண்டு ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவது போன்ற ரீல்ஸ்களை வெளியிட்டுவந்தார்.

கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 118 பவுன் நகைகளைக் கொள்ளையடித்தனர். சமூக வலைத்தளங்களில் இவரது ஆடம்பரக் காட்சியைக் கண்டே திருடியதாகக் கைதானவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நெல்லை ஸ்பாவில் பணிபுரிந்தபோது தன்னை ஏமாற்றி நகை பறித்துவிட்டதாகக் காண்ட்ராக்டர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் மதுமிதா மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த அடுத்தடுத்த பிரச்சனைகளால் கடந்த ஒரு மாதமாக அவர் எந்தவித வீடியோவும் வெளியிடாமல் இருந்தார்.

இந்நிலையில், தனது குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடும் வீடியோக்களை மீண்டும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: "சீதையை தீக்குளிக்க வைத்தீர்கள், அவர் தீக்குளித்த பிறகும் அவரை யாரும் நம்பவில்லை. அவதூறு, கேலி கிண்டல் பேச்சுக்களுக்கு மத்தியிலும் நாங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

என்னைப் பற்றி பேச பேச நான் உயர்ந்து கொண்டேதான் இருப்பேன். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள், எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ்கிறோம். என்னை வீழ்த்த நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும்காது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எவ்வளவோ அவதூறாகப் பேசினார்கள். ஆனால் அவர் இரும்புப் பெண்ணாக நிமிர்ந்து நின்றார்."

இவ்வாறு அவர் ஆவேரமாகப் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட 8 வீடியோக்களில், இந்த வீடியோவை மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதால் அவர் மீண்டும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறார்.