தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் காவலர்களுக்கான சிறப்பு கமாண்டோ பயிற்சி நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், பயிற்சியின் போது பல்வேறு சவாலான பிரிவுகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுத் திறமை வெளிப்படுத்திய காவலர்களைப் பாராட்டும் வகையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பயிற்சியில் சிறந்து விளங்கிய காவலர்களுக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கித் தங்களது பாராட்டுதல்களைத் தெரிவித்தார். மேலும், காவல்துறையின் பாதுகாப்புக் பணிகளை மேம்படுத்த இது போன்ற தீவிரப் பயிற்சிகளின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த நிறைவு விழாவில், கமாண்டோ படைப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M. ஸ்டீபன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகளும் உடன் பங்கேற்றுப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த காவலர்களை வாழ்த்திப் பாராட்டினர்.

