சபரிமலை மண்டல - மகரவிளக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் சபரிமலை சென்று தரிசனம் செய்வதற்கு ஏதுவாக, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் வழியாகப் பம்பைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்துத் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து இன்று (16.11.2026) முதல் பம்பைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் தொடங்கப்பட்டுள்ளன. இப்பேருந்துகள் தினமும் மாலை 7.00 மணி, 7.30 மணி, 8.00 மணி மற்றும் 8.30 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும்.
மேலும், பம்பைக்குச் செல்லும் பக்தர்களின் வருகையைப் பொறுத்துத் கூடுதலாகப் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
பம்பையில் இருந்து மறுமார்க்கமாகவும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படுவதால், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் எவ்விதத் தடையுமின்றி எளிதாகச் சென்று ஐயப்பனைத் தரிசித்துத் திரும்ப முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

