ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் தொடக்கம் முதலே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதவிகளைக் குவித்து வருகின்றனர்.
இத்தொடரில் ஏற்கனவே நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது பெண்களுக்கான 100 மீட்டர் டி12 தடகளப் போட்டியில் பங்கேற்ற அவர், பந்தய தூரத்தை வெறும் 12.02 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
இதன் மூலம் அவர் புதிய ஆசிய சாதனையைப் படைத்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். டி12 என்பது மிதமான பார்வைக் குறைபாடு கொண்ட வீரர், வீராங்கனைகளைக் குறிக்கும் வகையிலான பிரிவாகும். இந்தப் பிரிவில் போட்டியிட்ட சிம்ரன், ஒட்டுமொத்தமாக இரண்டு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி பாரா விளையாட்டு வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதற்கு முன்பு இந்தியாவில் இருந்து 3 வீரர்கள் மட்டுமே ஒரே தொடரில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தச் சாதனைக் பட்டியலில் தற்போது சிம்ரன் சர்மா 4-வது வீரராக (வீராங்கனையாக) இணைந்து பெருமை சேர்த்துள்ளார்.

