தீபாவளிப் பண்டிகையையொட்டிப் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், கன்னியாகுமரி மற்றும் தென்காசிக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்:
சென்னை - கன்னியாகுமரி: சென்னை எழும்பூரில் இருந்து வரும் நவம்பர் 5-ஆம் தேதி இரவு 11.50 மணிக்குச் புறப்படும் சிறப்பு விரைவு ரயில், மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்குக் கன்னியாகுமரியைச் சென்றடையும்.
கன்னியாகுமரி - சென்னை: மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து நவம்பர் 9-ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், மறுநாள் நண்பகல் 12 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடையும்.
தாம்பரம் – தென்காசி / செங்கோட்டை சிறப்பு ரயில்:
தாம்பரம் - தென்காசி: தாம்பரம் - தென்காசி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், நவம்பர் 7-ஆம் தேதி காலை 5 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மாலை 4.45 மணிக்குத் தென்காசியைச் சென்றடையும்.
செங்கோட்டை - தாம்பரம்: இதன் மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து நவம்பர் 9-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குச் புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3.20 மணிக்குத் தாம்பரத்தைச் சென்றடையும்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு நாளை (நவம்பர் 3-ஆம் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

