» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் தசரா திருவிழா சப்பர பவனி: மாவிளக்கு ஊர்வலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஞாயிறு 5, அக்டோபர் 2025 8:44:31 AM (IST)

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு சிவன் கோவில் முன்பு பல்வேறு அம்மன் ஆலயங்களின் சப்பர பவனி நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் தசரா திருவிழா கடந்த கடந்த செப்.23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் அனைத்து சப்பர பேரணி நேற்று மாலை நடந்தது. பேரணியில் கிராம தேவதை என அழைக்கப்படும் மேலூர் பத்திரகாளி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன், உள்ளிட்ட தூத்துக்குடி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் உள்ள சப்பரங்கள் பவனியாக வந்தன.

தொடர்ந்து 500க்கும் மேற்பட்டபெண்கள் மாவிளக்கு ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணி சிவன் கோவில் முன்பு வந்தடைந்தது. முன்னதாக வடபாகம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் சப்பரத்திற்கு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் கௌதம் உதவி பொது மேலாளர் வசந்த் தலைமை மேலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலையில் அனைத்து அம்மன்களுக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து பட்டுசாத்தி எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.
சப்பர பேரணி முன்பாக மேளதாளம் முழங்க ஒயிலாட்டம் கரகாட்டம் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள் விளையாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக வர அம்மன் ஆலயங்களின் இந்த சப்பர பேரணியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்ட அனைத்து சப்பரங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கன், ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மண்டல தலைவர் ராஜேஷ் கனி, பொதுச் செயலாளர் சிவராமன், சப்பரபேரணி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மாயக்கூத்தன், தலைவர் தனபாலன், செயலாளர் வன்னியராஜ், பொருளாளர் ஆதிநாத ஆழ்வார், அமைப்பாளர் சிவகுமார், துணைத்தலைவர்கள் ராகவேந்திரா வேலுசாமி, குருசாமி, காளிராஜா, துணை பொருளாளர் சரவணகுமார் மாவிளக்கு கமிட்டி நிர்வாகிகள் எஸ்பிஎஸ் கனகராஜ், பாலசேகர், கிருஷ்ணன், செல்லப்பா சங்கர் ராஜ், தங்கச் செல்வன், கோவில் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)



Om SakthiOct 6, 2025 - 01:50:25 PM | Posted IP 172.7*****