» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரூர் சம்பவத்தில் தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
சனி 4, அக்டோபர் 2025 5:12:24 PM (IST)
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பி வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அவர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தும் வருகின்றனர்.அந்த வகையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதற்காக யூடியூபர் மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சூழலில் இன்று (அக் 04) காலை மதுரை கோமதிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். ஆனால் அங்கு அவர் இல்லை. பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். அங்கு அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாதந்தோறும் 2,000 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:39:47 AM (IST)

மக்கள் தீர்ப்பை திமுகவிற்கு மதிக்கத் தெரியவில்லை : நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:24:28 AM (IST)

பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
சனி 18, ஜூலை 2026 5:39:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)


