» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை!
வெள்ளி 3, அக்டோபர் 2025 11:04:01 AM (IST)

சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகைக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் வசித்து வரும் தமிநாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நடிகர் எஸ்.வி. சேகர் மற்றும் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பகுதிகளை சேர்ந்த போலீசாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று, சென்னை கோட்டையில் உள்ள கடற்படை உணவகம், புரசைவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம், சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகம், மத்திய அரசின் வருவாய் துறை அலுவலகங்கள், அமலாக்கத்துறை அலுவலகங்கள் என பொதுமக்கள் அதிகமாக வந்துபோகக்கூடிய இடங்களிலும், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகங்கள், பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இல்லங்கள் என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் வந்து கொண்டே இருக்கிறது.
இதுதொடர் பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதையடுத்து தீவிர கண்காணிப்பு செய்து ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அனைத்தும் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் மின்னஞ்சல் வந்திருப்பதாக போலீசார் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டணி கட்சிகள் தேர்தலுக்குப் பின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றன: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
வெள்ளி 12, ஜூன் 2026 12:23:57 PM (IST)

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 12:09:08 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 10:23:33 AM (IST)

அரசியலில் நுழைய வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன் - நடிகர் ராகவா லாரன்ஸ்!
வெள்ளி 12, ஜூன் 2026 10:15:11 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா கடத்திய இளம்பெண் உள்பட 2பேர் கைது: 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!
வெள்ளி 12, ஜூன் 2026 8:28:33 AM (IST)


