» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்!
வெள்ளி 3, அக்டோபர் 2025 10:37:37 AM (IST)

தூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின் விசைப்படகு மீனவர்கள் 179 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீன்பாடு அதிகமாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் செப்.26 மற்றும் 27 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
அதன் பின்னர் தசரா பண்டிகையை முன்னிட்டு அக்.2ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுழற்சி முறையில் 179 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


