» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

தூத்துக்குடியில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோயில், சந்தனமாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடந்து.
தூத்துக்குடியில் வட பாகம் சந்தன மாரியம்மன் கோவில், மட்டக்கடை உச்சினிமாகாளி அம்மன் கோவில், தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில், மேலூர் பத்ரகாளியம்மன் கோவில், சண்முகபுரம் வடக்கு பத்திரகாளியம்மன் உள்ளிட்ட 25 அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா கடந்த செப்.23ஆம் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலையில் நடந்தது.
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நரகாசுரனின் 7 தலைகள் சூரசம்ஹாரம் செய்யப்பட்டது. இதில் சூரன் தலை, கஜமுகன் தலை, சிங்கம் தலை, மான் தலை, ரிஷி முகம் தலை, நரகாசுரன் தலை இறுதியாக மகிஷாசூரன் தலை வெட்டப்பட்டு அம்மனின் பாதத்தில் வைக்கப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது. இது போல் மாநகரில் பல்வேறு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு: குஷ்பு குற்றச்சாட்டு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:02:56 PM (IST)

துர்கா ஸ்டாலினை அநாகரிகமாக பேசியதாக பாஜக நிர்வாகி மீது திமுக வழக்கறிஞர் அணி புகார்!
வெள்ளி 7, நவம்பர் 2025 4:35:02 PM (IST)

எஸ்.ஐ.ஆர் என்பது ஜனநாயக படுகொலை : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:15:30 PM (IST)

மூதாட்டிகள் இருவரை கொன்று நகை கொள்ளை : கொலையாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:40:16 PM (IST)


.gif)