» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)
காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி தந்தை மற்றும் 2 மகள்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் "செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், நெம்மேலி கிராமம், சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த 28.9.2025 அன்று மாலை சுமார் 5.00 மணியளவில் சென்னை, பெரம்பூர் அகரம் பகுதியிலிருந்து மகேந்திரா வேன் மூலம் சுற்றுலா வந்த 17 நபர்களில் பெரம்பூர், சக்கரபாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 36) த/பெ.சந்திரன் என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
மேலும், அவரது இரண்டு மகள்கள் கார்த்திகா (வயது 17) மற்றும் துளசி (வயது 16) ஆகிய இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு 30.9.2025 அன்று மேற்படி இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


