» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் விரைவு!
புதன் 1, அக்டோபர் 2025 12:34:32 PM (IST)
கரூர் கூட்ட நெரிசலில் 41பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்தை கைது செய்வதற்காக 3 தனிப்படையினர் சென்னை, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் பலியாகியுள்ளனர். இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.முதல்கட்டமாக, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில், ஆனந்த் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஏற்காட்டில் உள்ள மலை கிராமத்தில் ஆனந்த் தங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக காவல்துறை ஐஜி ஜோஷி நிர்மல் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு மட்டுமின்றி சென்னையிலும் ஆனந்தை தேடும் பணியைக் காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர். இதனிடையே, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலருவி எக்ஸ்பிரஸ் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கம் : பயணிகள் நலச் சங்கம் இனிப்பு வழங்கி வரவேற்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 3:22:46 PM (IST)

தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 5-இல் தாக்கல் : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:25:51 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருவிழாவில் அம்மன் வேடத்தில் திரிஷா பேனர்: அதிரடி அகற்றம் - இருவர் மீது வழக்குப் பதிவு!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:51:25 AM (IST)

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)


