» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவுடன்தான் எங்கள் கூட்டணி: வைகோ பேச்சு!
ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 10:07:20 AM (IST)

மனப்பூர்வமாக திமுகவுடன் கரம் கோர்த்து நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். பணி ஆற்றுவோம் என்று தூத்துக்குடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்
ஸ்டெர்லைட் போராட்ட வரலாறு.... இன்றைய அரசியல்! என்ற தலைப்பில் தூத்துக்குடியில் வி.வி.டி.சிக்னல் அருகே மதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதித்திட கூடாது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி 2026 தேர்தலுக்குப் பின்னரும் ஆட்சி மலர வேண்டும். நாம் எங்கே எந்த கூட்டணியில் இருந்தாலும் நன்றி விசுவாசத்தோடு உழைப்பவர்கள்.
இதில் ஆயிரம் கட்டுக் கதைகள் பொய் செய்திகளை ஏடுகள் வெளியிடலாம். எட்டுக்காலம் போடலாம். உக்ரைன்-ரஷிய போர் நடந்து வரும் நிலையில் ரஷியாவில் சிக்கியுள்ள தமிழக மருத்துவ மாணவரை மீட்க உதவுமாறு துரை வைகோவிடம் அவரது பெற்றோர் கூறியுள்ளனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தவே மனிதாபிமான அடிப்படையில் பிரதமரை துரை வைகோ சந்தித்தார். நான், கூட்டணி தர்மத்தை எப்போதும் மதிப்பவன். இந்தக் கூட்டணிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன். திமுகவுடன்தான் எங்கள் கூட்டணி. அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது ஏன்? - மின்வாரியத்துறை தலைவர் விளக்கம்
ஞாயிறு 7, ஜூன் 2026 11:49:49 AM (IST)

டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:47:51 AM (IST)

தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன் வரத்து குறைவு; பொதுமக்கள் ஆர்வம் – மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:08:16 AM (IST)

குடும்பத்தினர் கண் எதிரே கடத்தப்பட்ட கார் விற்பனை ஏஜென்ட் மீட்பு: 2 பேர் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:58:15 AM (IST)

நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:51:11 AM (IST)

ரயிலில் வந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : கொத்தனாருக்கு தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைப்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:37:41 AM (IST)


