» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டி தமிழகம் சாதனை படைக்கும்: தங்கம் தென்னரசு

புதன் 6, ஆகஸ்ட் 2025 4:20:25 PM (IST)

விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்டி சாதனை படைக்கும் என்பது உறுதி என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது சாதனையை நாம் தான் முறியடிக்க வேண்டும் என்பதற்கேற்ப 9.69% என்று இந்தியாவிலேயே முதலிடத்திலிருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது 11.19% என புதிய உச்சத்தைத் தொட்டு வரலாறு படைத்துள்ளது நமது திராவிட மாடல் அரசு.

"எல்லார்க்கும் எல்லாம்" என்ற தத்துவத்தோடு அனைத்து துறைகளிலும் தொலைநோக்கு பார்வையுடன் கவனம் செலுத்தி, அதனைத் திறம்படச் செயல்பட வைத்த நமது முதல்வர் ஸ்டாலினால் தான் இருமுறை இந்த சாதனை நமக்கு சாத்தியமாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க சதவிகிதத்தை இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் எட்டியுள்ளது என்ற சாதனை முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத்திறனுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்

மேலும் முதல்வர் தெரிவித்துள்ளது போல், விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்டி சாதனை படைக்கும் என்பது உறுதி. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory