» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 3:30:23 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் 18 கிராம ஊராட்சிகளில் நடந்தது.
இதில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் ஜுலை - 28ம் தேதி முதல் ஆகஸ்ட் - 01ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகதணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இடைசெவல் கிராம ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் பாலம்மாள் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமிதா, சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் ஆதிலட்சுமி அனைவரையும் வரவேற்றார். இதில் தூத்துக்குடி மாவட்ட சமூக தணிக்கை வட்டாரவள பயிற்றுநர் மோகன் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார். இதில் சமூகத்தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கபட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இதில் கிராம வள பயிற்றுநர்கள் சுதா, சுகன்யா, முனியராஜலட்சுமி, கெளசல்யா பணித்தளப் பொருப்பாளர்கள், உள்பட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமலட்சுமி நன்றி கூறினார். இதேபோல் கோவில்பட்டி ஒன்றியம் சத்திரப்பட்டி உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வன்னி அரசு வலியுறுத்தல்!
திங்கள் 20, ஜூலை 2026 5:55:15 PM (IST)

தவெக அரசின் நிர்வாகத் தோல்வி: மின்கட்டணக் குளறுபடிகளுக்கு பாஜக கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:16:12 PM (IST)

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதா ஜீவன் உள்பட 120 பேர் கைது: போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
திங்கள் 20, ஜூலை 2026 3:46:14 PM (IST)

தமிழ்நாட்டில் நடப்பது சாத்தானின் ஆட்சியா? - தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 3:36:01 PM (IST)



m.sundaramAug 1, 2025 - 07:22:38 PM | Posted IP 104.2*****